|
அஜீத்தின் 50வது படத்தை இயக்குகிறார் சீமான் |
|
|
|
ஜீவாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குவதாக இருந்தார் தமிழ் உணர்வாளரும் இயக்குநருமான சீமான். ஆனால் இப்போது அந்தத் திட்டத்தில் ஒரு மாறுதல். அஜீத்தை வைத்து தாணு தயாரிக்கவிருக்கும் மெகா படத்துக்கு இயக்குநராக ஒப்பந்தமாகியுள்ளார் சீமான். இந்தப் படத்துக்காக ஜீவாவை வைத்து இயக்குவதாக உள்ள படத்தைத் தள்ளி வைத்துள்ளார் சீமான்.
இந்தப் படம் அஜீத்துக்கு 50 வது படம் என்பதால், தமிழ் சினிமாவின் அர்த்தமுள்ள ஒரு படைப்பாக அமைய வேண்டும் என ஆசைப்படுகிறார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. எனவே அதற்கேற்ப உணர்வுள்ள ஒரு கதையைத் தயார் செய்திருக்கும் சீமான், இன்னும் சில தினங்களில் அஜீத்திடம் கதை சொல்கிறார். அவருக்கு கதை ஓகே ஆகி விட்டால்இ கந்தசாமி வெளியீட்டுக்குப் பிறகு படத்துக்கான ஆயத்தங்களைத் தொடங்கி விடும் உத்தேசத்தில் உள்ளாராம் தாணு. இதற்கிடையே சீமான் நடிப்பில் வெளிவந்துள்ள மாயாண்டி குடும்பத்தார் படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு, அவருக்கு மேலும் பல புதுப்பட வாய்ப்புகளைத் தேடி வர வைத்துள்ளது. ஆனால் 'பணத்துக்காக நடிக்கும் தொழில்முறை நடிகனல்ல நான். என் உணர்வோடு ஒத்துப் போகிற படமாக இருந்தால் நடிப்பேன்..' என்பதில் உறுதியாக நிற்கிறார் மனிதர்.
|