Main Menu
Home
Cine New
Contact Us
Gallery
Sitemap
RSS
Latest News

athirvu, athirvu.com, athirvu.net

Tamil CIne Express

Home arrow Cine New arrow சிம்புவை காதலிக்கிறேனா?-த்ரிஷா Thursday, 23 February 2012
 
விஷால், பிருத்விராஜ் ஆகியோருடன் இணைந்து நடித்தபோது அவர்களுடன் காதல் கிசுகிசுக்களுக்கு உள்ளானார் ப்ரியாமணி! சமீபமாக இவர் தெலுங்கு நடிகர் தருணுடன் படுபயங்கரமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். ப்ரியாமணியும், தருணும் நவ வசந்தம் எனும் தெலுங்கு படத்தில் இணைந்து நடித்தனர். அது முதல் இருவருக்கும் காதல் தீ பற்றிக் கொண்டதாக ஆந்திர படவுலகம் முழுதும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
Read more...
 
சிம்புவை காதலிக்கிறேனா?-த்ரிஷா Print E-mail
Imageகிட்டத்தட்ட 6 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் சிம்புவுடன் தீவிரமாக லவ்வுவதாக த்ரிஷா குறித்து வதந்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அலை படத்துக்குப் பிறகு மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கும் விண்ணைத் தாண்டி வருவாயா என்ற படத்தில்தான் இந்த லவ் ரொம்ப ஸ்ட்ராங்காகிவிட்டதாக சில பத்திரிகைகளில் 'பிட்' ஓடிக் கொண்டிருக்கிறது!

இதுகுறித்து த்ரிஷாவிடம் கேட்டபோது, "இந்த மாதிரி வதந்திகள் இப்ப எனக்கு பழகிப் போச்சு. ஏன்னா... நான் இன்டஸ்ட்ரிக்கு வந்து 7 வருஷம் ஆகுது. இனிமேலும் இப்படிப்பட்ட செய்திகள் வரலேன்னாதான் ஆச்சரியம்.

அதைப் பத்தி நான் கவலைப் படறதே இல்லை. ஆமா... இல்லன்னு ஒரு வார்த்தையில பதில் சொல்லக் கூட எனக்குப் பிடிக்கல", எனும் த்ரிஷா தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்துவதை விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

அது ஏன் தெலுங்கில் மட்டும் ஸ்பெஷல் அக்கறை?

தெலுங்கில் நான்தான் ராணி மாதிரி. அந்த அளவு மரியைதையோட என்னை நடத்துறாங்க. எனனோட சமீபத்திய படம் கிங் பெரிய ஹிட் அங்கே. அதனால் தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்துவதை விரும்புகிறேன்.

அதுக்காக தமிழைப் புறக்கணிக்கலை. இங்கும் வித்தியாசமான வேடங்களைச் செய்ய விரும்புகிறேன்இ எனும் த்ரிஷாவுக்கு சென்னையில் மட்டும் 1000 ரசிகர் மன்றங்கள் உள்ளனவாம்!

இதில் உறுப்பினர்களாக உள்ள அனைவரும் நற்பணிகளைச் செய்ய வேண்டும் என்று அன்புக் கட்டளை போட்டிருக்கிறாராம்.

அது சரி... 'தெலுங்கு ராணி' சொன்னா சென்னை ரசிகர்கள் செய்துதானே ஆகணும்!

 
< Prev   Next >

Tamil Cinema, Tamil Cine express, tamil film, tamil movie, indian cinema,