Main Menu
Home
Cine New
Contact Us
Gallery
Sitemap
RSS
Latest News

athirvu, athirvu.com, athirvu.net

Tamil CIne Express

Home arrow Cine New arrow ஐரோப்பிய ஒன்றியத்துக்கு M.I.A அழைப்பு Thursday, 23 February 2012
 
லிப்-லாக் முத்தம் என்றால் அலறி அடித்துக் கொண்டு ஓடும் நடிகை தமன்னா, முத்தக்காட்சிக்கு ஓ.கே. சொல்லியிருக்கிறாராம். இந்த தகவல்தான் கோலிவுட்டின் ஹாட் டாபிக். கண்ணன் இயக்கத்தில் பரத்துடன் தமன்னா ஜோடி போட்டு நடித்து வரும் படம் கண்டேன் காதலை. இந்த படத்தில் தமன்னாவுக்கு,
Read more...
 
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு M.I.A அழைப்பு Print E-mail
Imageசிறிங்கா தடுப்பு முகாம்களுக்குள் கட்டாயப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் நூறாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு உதவுமாறு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உலகப் பிரபல பாடகி மாயா அழைப்பு விடுத்துள்ளார், என பிரித்தானியா "ஸ்கை செய்திகள்" தெரிவித்துள்ளன. மேற்குலக இசையில் பிரபலமான மாயா அருட்பிரகாசம்.

 M.I.A sky news, ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தேர்தலின் ஒரு சுயாதீன வேட்பாளரான, ஜனனி ஜனநாயகத்துக்கு தனது முழு ஆதரவையும் கொடுத்திருந்தார் என்றும் "ஸ்கை செய்தி" கூறியுள்ளது.

 "300இ000 மக்களை கட்டாயப்படுத்தி முகாம்களுக்குள் தடுத்து வைத்திருக்கும் சிறிலங்கா அதிகாரிகள் அவர்களது முழு உரிமைகளையும் பறித்துள்ளார்கள். அம்மக்களுக்கு உணவில்லை, அம்முகாம்களுக்குச் செல்வதற்கு ஊடகங்களுக்கு அனுமதி இல்லை, ஊடக சுதந்திரம் இல்லை" என்று மாயா "ஸ்கை செய்திகளுக்குத்" தெரிவித்துள்ளார்.


"ஐரோப்பிய ஒன்றியம் இந்த விடயத்தில் முடிவெடுக்க இயலாமல் உள்ளது, பிரித்தானியா மற்றும் ஏனைய சர்வதேச அரசுகள் உடனடியாக இறங்கி அம்மக்களுக்கு உதவ வேண்டும்" என்று மாயா மேலும் கூறியுள்ளார். "தொலைக்காட்சியிலும் இணையத்தளங்களிலும் எங்கள் கண்கள் முன்னேயே ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.


ஆனால், இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென்றும், இதே வேறொரு இடத்தில் நடந்திருந்தால்இ நாம் கூடுதலாக செயற்பட்டிருப்போம்"  என்றும் மாயா "ஸ்கைச் செய்திகளுக்கு" தெரிவித்துள்ளார்.


தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இதுவரை ஒருவருமே உண்மையான ஆர்வம் காட்டவில்லையென்றும்இ ஆனால் ஐரோப்பிய ஒன்றியத் தேர்தலில் போட்டியிடும் ஜனனி ஜனநாயகம் தமிழ் மக்களின் கஷ்டங்களுக்கு குரல் கொடுக்கக் கூடியவர் என்றும் மேலும் அவர் கூறியுள்ளார்.


"முட்கம்பிளால் சுற்றிவளைக்கப்பட்ட முகாம்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு இன்னும் பதில்கள் கிடைக்கப்படவில்லை, அதில் பல பேர் காயப்பட்டவர்கள் மருத்துவம் இல்லாமலும், மற்றவர்கள் பல நோய்களுக்கு உள்ளாகியும் இறக்கிறார்கள். ஐரோப்பியாவில் எங்களுக்கு என்று ஒரு பிரதிநிதி தேவை", என்றும் மாயா குறிப்பிட்டுள்ளார்.

 
< Prev   Next >

Tamil Cinema, Tamil Cine express, tamil film, tamil movie, indian cinema,