|
காதல் பரிசாக சொகுசு கார்! மறுக்கிறார் ப்ரியாமணி!! |
|
|
விஷால், பிருத்விராஜ் ஆகியோருடன் இணைந்து நடித்தபோது அவர்களுடன் காதல் கிசுகிசுக்களுக்கு உள்ளானார் ப்ரியாமணி! சமீபமாக இவர் தெலுங்கு நடிகர் தருணுடன் படுபயங்கரமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். ப்ரியாமணியும், தருணும் நவ வசந்தம் எனும் தெலுங்கு படத்தில் இணைந்து நடித்தனர். அது முதல் இருவருக்கும் காதல் தீ பற்றிக் கொண்டதாக ஆந்திர படவுலகம் முழுதும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
ப்ரியாமணிக்கு தனது காதல் பரிசாக தருண் சமீபத்தில் இன்னோவா சொகுசு கார் ஒன்றை கொடுத்ததாக டோலிவுட் முழுக்க ஒரு செய்தி. ஆனால் இதை ப்ரியாமணி முழுதாக மறுத்து வருகிறார். அந்த கார் அவர் பணத்தில் சொந்தமாக வாங்கியதாகவும் சொல்கிறார் அம்மணி! நடிகர் தருண் தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் நடித்தவர் என்பதோடு பிரபல நடிகை ரோஜாமணியின் வாரிசு என்பதும் குறிப்பிடத்தக்கது! |