|
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் ஷாம் |
|
|
நடிகர் ஷாம் சென்ற கார் மீது டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஷாம் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். சென்னை தாம்பரம் அருகே காட்டாங்கொளத்தூரில் நடந்த சினிமா சூட்டிங்கில் பங்கேற்று விட்டு தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் ஷாம். தாம்பரம் அருகே வந்தபோது ஒரு சிக்னலில் கார் நின்றது. அப்போது பின்னால் வேகமாக வந்த டிராக்டர் ஷாமின் கார் மீது மோதியது.
இதில் கார் நிலைதடுமாறி முன்னால் நின்றிருந்த போலீஸ் ஜீப் மீது மோதியது. டிராக்டர், ஜீப் ஆகியவற்றுக்கு இடையில் சிக்கிய ஷாமின் கார் பெருமளவில் சேதமடைந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஷாம் காயமின்றி உயிர் தப்பினார். |